ஜூலை 17ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - தூத்துக்குடி இளைஞர்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
தூத்துக்குடி, 14 ஜூலை (ஹி.ச.) வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்
ஜூலை 17ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - தூத்துக்குடி இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு மாவட்ட ஆட்சியர் அழைப்பு


தூத்துக்குடி, 14 ஜூலை (ஹி.ச.)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 17.07.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது.

இம்முகாமில் வேலையளிக்கும் (Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, BE, DIPLOMA, I.T.I டிரைவர் மற்றும் கணினிபயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ள அம்மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர்கள் (Employers) மற்றும் வேலைநாடுநர்கள் (Jobseekers) அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவுசெய்தல் வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்புமுகாம் தொடர்பான பல்வேறு தகவல்களை பெற THOOTHUKUDI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்தும் மற்றும் இவ்வலுவலக தொலைபேசி எண்.0461-2340159-ஐ தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b