ஆனி மாத கடைசி நாளை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
சென்னை, 15 ஜூலை (ஹி.ச.) முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில், அதிக பத்திரப்பதிவு நடக்கும் என்பதால், பொது மக்கள் கோரிக்கை அடிப்படையில், கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆடி மாதம் தொடங்க இருப்பதை முன்னிட்டு, ஆனி மாதத்தின் கடைசி
ஆனி மாத கடைசி நாளை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு


சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)

முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில், அதிக பத்திரப்பதிவு நடக்கும் என்பதால், பொது மக்கள் கோரிக்கை அடிப்படையில், கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆடி மாதம் தொடங்க இருப்பதை முன்னிட்டு, ஆனி மாதத்தின் கடைசி நாளான நாளை (ஜூலை 16), அதிகமானோர் பத்திரப்பதிவு செய்ய, ஆர்வம் காட்டுவர்.

இதனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை பத்திரப்பதிவுக்கான முன்பதிவு டோக்கன்களின் எண்ணிக்கையை உயர்த்தி பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி வழக்கமாக ஒரு சார்பதிவாளர் மட்டுமே உள்ள அலுவலகங்களில் 100 முன்பதிவு டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் 150 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும், இதேபோல் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள பெரிய அலுவலகங்களில் வழக்கமாக 200 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் நாளை 300 டோக்கன்கள் வரை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனி கடைசி நாளில் பத்திரப்பதிவு செய்வது மங்களகரமானது என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Hindusthan Samachar / vidya.b