சந்திரபாபு சிண்டிகேட் தான் மாநிலத்தை நடத்துகிறது - ஒய்.எஸ்.ஆர் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
ஆந்திரா , 15 ஜூலை (ஹி.ச.) ஆந்திர மாநில பீமவரத்தில் ஆக்குவா விவசாயிகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஜெகன் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆக்குவா (இறால் வளர்ப்பு) துறை ப
A


ஆந்திரா , 15 ஜூலை (ஹி.ச.)

ஆந்திர மாநில பீமவரத்தில் ஆக்குவா விவசாயிகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஜெகன் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆக்குவா (இறால் வளர்ப்பு) துறை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும், ஆக்குவா விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,தீவனம் மற்றும் இறால் குஞ்சுகளின் விலை நிர்ணயம் தொடர்பாக தற்போதைய அரசை கடுமையாக விமர்சித்தார்.

ஆக்குவா துறை மூலம் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இன்று இந்த துறை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

தீவனத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. விலை உயர்வுக்கு உரிய காரணம் இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு எந்த ஒரு பயிரிலும் போதுமான லாபம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் ஆதரவாளர்கள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளை சுரண்டுகின்றனர்.

தீவனம் மற்றும் இறால் குஞ்சுகளின் விலையை அவர்களே நிர்ணயிக்கின்றனர்.

சந்திரபாபு சிண்டிகேட் தான் மாநிலத்தை நடத்துகிறது.

தீவன விலை கிலோவுக்கு ரூ.14 முதல் ரூ.16 வரை உயர்த்தப்பட்ட நிலையில், பின்னர் கிலோவுக்கு ரூ.2 குறைப்பது விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது.

விலையை உயர்த்தும்போது உயர்த்துகிறார்கள்,குறைக்க வேண்டிய நேரத்தில் ஏன் குறைக்கவில்லை.

எனது ஆட்சிக் காலத்தில் ஆக்குவா விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க APSDA அமைப்பு உருவாக்கப்பட்டது.

தீவனம், இறால் குஞ்சுகள் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டபோது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், சந்திரபாபு ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

இறால்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுத்தோம்.

விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை குறையாமல் கண்காணித்தோம்.

தற்போது இறால் விலை கிலோவுக்கு ரூ.230-ஐ கூட தாண்டாத நிலை உள்ளது.

ஆக்குவா விவசாயிகளுக்கு யூனிட் மின்சாரம் ரூ.1.50 என்ற மானிய விலையில் வழங்கினோம்.

5 ஆண்டுகளில் மின்சார மானியமாக ரூ.3,306 கோடி வழங்கப்பட்டது.

சந்திரபாபு ஆட்சியில் நிலுவையில் இருந்த ரூ.401 கோடி மானியத் தொகையையும் நாங்கள் செலுத்தினோம்.

சந்திரபாபு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஏமாற்றமே. ஆக்குவா விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை தற்போதைய அரசு நிறைவேற்றியுள்ளதா என்று ஜெகன் கேள்வி எழுப்பினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA