Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 15 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாநகரில் உள்ள நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் தவெக வழக்கறிஞர் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதில், எங்கள் கழக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் அவர்கள் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக சிறப்பாக பணிசெய்து வருகின்றார்.
தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று முன்தினம் நடந்த அண்ணா தொழிற்சங்க கூட்டத்தில்
தமிழக முதல்வரை ஒருமையிலும், தரக்குறைவாகவும், தரம் தாழ்த்தியும் மக்கள் அவதூராக பேசி, முதல்வர் அவர்களின் மரியாதையையும், புகழையும், கண்ணியத்தையும், கெடுக்கும் வகையில், மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்து வருகின்றார்.
அதோடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை கண்ணியம் குறைந்தும் ஒருமையிலும், அநாகரிகமாகவும், பேசிய செல்லுார் ராஜூ முதல்வர் அவர்களை தரக்குறைவாக பேசிய வீடியோ ஆதாரத்தையும் Pen drive ல் இணைத்துள்ள்ளதாகவும், தரக்குறைவாக பேசிய செல்வராஜ் மீது உடனே கைது செய்து, தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தவெக உறுப்பினர்களை ஒன்று திரட்டி அவர் நடத்தும் கூட்டத்தினை முற்றுகையிட போவதாகவும் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN