Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச)
சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில், பெறப்படும் பொதுமக்கள் மனுக்கள் மற்றும் அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
முதலமைச்சரின் முகவரி துறையின் கீழ் இயங்கி வரும் இந்த தனிப்பிரிவு மூலம், தமிழகம் முழுவதிலுமிருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.
சமீபகாலமாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார்.
குறிப்பாக, பெறப்பட்டுள்ள மொத்த மனுக்களின் எண்ணிக்கை, அவற்றில் தீர்வு காணப்பட்ட மனுக்களின் விவரம், நிலுவையில் உள்ள மனுக்களின் தற்போதைய நிலை மற்றும் மனுக்களுக்கு விரைவாக தீர்வு வழங்கும் நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ