Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 15 ஜூலை (ஹி.ச.)
கோவை அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில், புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
16 ஆண்டுகால கல்விச் சேவையில் தடம் பதித்துள்ள இக்கல்லூரியின் இந்த பிரம்மாண்ட விழா புதிய மாணவர்களை வரவேற்கும் 'Welcome to Batch' நடைபெற்றது. இந்த விழாவில் ஹோட்டல் தொழில் துறை, காவல்துறை மற்றும் வங்கித்துறையைச் சேர்ந்த பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
வெங்கடராகவன் (இயக்குநர் - மனிதவள மேம்பாடு, தி ரெசிடென்சி டவர்ஸ், கோவை) விவேகானந்தன் (காவல் ஆய்வாளர், துடியலூர்) சுகந்தி மாலினி (எக்ஸிகியூட்டிவ் ஹவுஸ்கீப்பர், எம் இன் ஹோட்டல், கோவை) ராஜேஷ் (மேலாளர், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, கோவை) இந்த விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், புதியதாகக் கால்பதிக்கும் மாணவர்கள் தங்களது ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் மூலம் எவ்வாறு இத்துறையில் சாதிக்க வேண்டும் என்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து அறிவுரை வழங்கினர்.
தொடர்ந்து கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுரேஷ் குமார் துறைத் தலைவர் மற்றும் முதன்மை சமையல் கலைஞர் டாக்டர் கார்த்தி கேசவன் மற்றும் நிர்வாக அலுவலர் (AO) புவனேஸ்வரி ஆகியோர் புதிய மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினர்.
அவர்கள் பேசுகையில்,
இக்கல்லூரி மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்றுவிப்பு முறைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதாகத் தெரிவித்தனர்.
மேலும், இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களான பிரவீன்குமார் (தொழில்முனைவோர், ஐஸ்வர்யா கேட்டரிங் சர்வீஸ்) கிறிஸ்டி பிரியா (தலைமை பேஸ்ட்ரி செஃப் மற்றும் தொழில்முனைவோர்) நவீன்குமார் (மனிதவள உதவியாளர், தி ரெசிடென்சி டவர்ஸ்)ஆகியோர் தங்களின் வெற்றிக் கதைகளை புதிய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு பெரும் ஊக்கமளித்தனர்.
புதிய கனவுகளோடும், உலகளாவிய வேலைவாய்ப்புகளைப் பெறும் நோக்கத்தோடும் இந்த கல்லூரியில் இணைந்துள்ள மாணவர்களுக்கு இவ்விழா ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது.
Hindusthan Samachar / ANANDHAN