Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 15 ஜூலை (ஹி.ச.)
கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிலைக்கு எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, கட்சியினர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர்களான சங்கரபாண்டியன் மற்றும் உமாபதி சிவன் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்தனர்.
இந்த சம்பவத்தால் காங்கிரஸ் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Hindusthan Samachar / GOKILA arumugam