Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 15 ஜூலை (ஹி.ச.)
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கிராம கோவிலில் ஒன்றான அருள்மிகு கௌமாரியம்மன் கோவிலின் 3 நாட்கள் நடைபெறும் ஆனி பெருந்திருவிழா துவங்கியது.
கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் முக்கிய மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் இரண்டாவது நாளாக இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அழகு குத்தி தீச்சட்டி எடுத்தும், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
மேலும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வணங்கக் கூடிய அருள்மிகு கௌமாரியம்மன் சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்கினி சட்டியும் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை அருள்மிகு கௌமாரியம்மனுக்கு செலுத்தி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN