Enter your Email Address to subscribe to our newsletters

அமிர்தசரஸ், 15 ஜூலை (ஹி.ச.)
இந்தியா - இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) கீழ், இங்கிலாந்துக்கான முதல் சரக்கு ஏற்றுமதி இன்று அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரக (DGFT) அதிகாரிகள், சரக்குப் பிரிவு பிரதிநிதிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது, சரக்குகளை பொதி செய்தல், ஸ்கேன் செய்தல் மற்றும் சரக்கு கொள்கலன்களை விமானத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்ட முழு சரக்கு கையாளும் செயல்முறையும் செயல்விளக்கமாக காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கான முதல் சரக்கு விமானம் முறைப்படி கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரக துணை இயக்குநர் ஆதித்யா சிங் சௌகான் பேசுகையில்,
இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், கிட்டத்தட்ட 99 சதவீத இந்தியப் பொருட்களுக்கு இங்கிலாந்து சந்தையில் வரியில்லா அணுகல் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஆயத்த ஆடைகளுக்கு 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்பட்டதால் இந்தியப் பொருட்களின் போட்டித்தன்மை குறைந்திருந்தது.
இந்த வரிகள் நீக்கப்பட்டுள்ளதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் குறிப்பிடத்தக்க நன்மையைப் பெறுவார்கள், இது ஏற்றுமதி அதிகரிப்புக்கும் சிறந்த வணிக வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
அமிர்தசரஸ் சரக்குப் பிரிவு பொறுப்பாளர் ஆசாத் சிங் கூறுகையில்,
இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதல் ஏற்றுமதியாக இங்கிலாந்துக்கு ஆயத்த ஆடைகள் அனுப்பப்பட்டுள்ளது.
அமிர்தசரஸிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்கனவே ஏற்றுமதி நடந்து வந்தாலும், வரியில்லா ஒப்பந்தம் இன்னும் பல ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் நுழைய ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமிர்தசரஸ் சரக்கு முனையத்திலிருந்து முக்கியமாக ஆயத்த ஆடைகள், விளையாட்டுப் பொருட்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் அல்போன்சா மற்றும் கேசர் மாம்பழங்கள், பேபி கார்ன், பச்சை மிளகாய் மற்றும் பிற காய்கறிகள் போன்ற விரைவில் அழுகக்கூடிய வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் பஞ்சாப் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியா-இங்கிலாந்து இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b