Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது.
அதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தங்கம் விலையில் காலை மாலை என 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தொடர் சரிவை கண்டது.
நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,150க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன் படி இன்று ( ஜூலை 15) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,180க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 240க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P