அமர்நாத் யாத்திரை - 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்
காஷ்மீர் , 15 ஜூலை (ஹி.ச.) காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ந்தேதி தொடங்கியது. வருகிற ஆகஸ்டு 28-ந்தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. இதையொட்டி, ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து 13-வது குழுவாக 5 ஆயிரத்து 335 ப
A


காஷ்மீர் , 15 ஜூலை (ஹி.ச.)

காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ந்தேதி தொடங்கியது. வருகிற ஆகஸ்டு 28-ந்தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது.

இதையொட்டி, ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து 13-வது குழுவாக 5 ஆயிரத்து 335 பக்தர்கள் அதிகாலை புறப்பட்டனர்.

இதில் 3 ஆயிரத்து 911 ஆண்கள், 1,288 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் 1,736 பேர் 84 வாகனங்களில் பால்டால் வழியாகவும், 3,599 பேர் 148 வாகனங்களில் பாரம்பரிய பஹல்காம் வழியாகவும் பயணம் மேற்கொண்டனர்.

யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை அமர்நாத் குகைக்கோவிலில் 2 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும், ஜம்முவில் இருந்து இதுவரை 93 ஆயிரத்து 36 பக்தர்கள் யாத்திரைக்காக புறப்பட்டுள்ளனர்.

யாத்திரையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பக்தர்களின் வசதிக்காக தேவையான இடங்களில் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல்

15-ந் தேதி தொடங்கியது.

பக்தர்கள் ஒருவர் ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

மேலும், மருத்துவ சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயமாகும்.

பனிலிங்கம் உருகிய நிலையிலும், அமர்நாத் யாத்திரையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA