பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் கைதான நான்கு பேர் சிறையில் அடைப்பு
கள்ளக்குறிச்சி, 15 ஜூலை (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பிலோமினா–பெஞ்சமின் தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடும்பத்தினர் வீட்டில் உறங்கிக் கொண்டிர
Kallakurichi Court


கள்ளக்குறிச்சி, 15 ஜூலை (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பிலோமினா–பெஞ்சமின் தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், குடும்பத்தினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நேரத்தில் சத்தம் கேட்டு வீட்டின் மாடியிலிருந்து பிலோமினால் என்பவரது மகன் அந்தோணிசாமி எட்டிப் பார்த்தபோது கொடுவாளைக் காட்டி அந்தோணி சாமியை கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் ஈடுபட்ட ரோடு மாமந்தூர் பகுதியைச் சேர்ந்த நரசிம்மா, அசோக் மற்றும் வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார் இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கொடுவாளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN