Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 15 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தைப் போல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் (ராஜா தியேட்டர் அருகில்) அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு சிலைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பலரும் கலந்து கொண்டு காமராஜரின் நினைவைப் போற்றினர்.
தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், மதிய உணவுத் திட்டத்திற்கும் வித்திட்ட அவரது தொண்டு என்றென்றும் நினைவுகூரத்தக்கது என தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
Hindusthan Samachar / vidya.b