17 வயது கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை – பயிற்சியாளர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னை, 15 ஜூலை (ஹி.ச.) சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் கபடி பயிற்சியாளர் ராஜூவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கடந்த ஜனவரி
Daj


சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)

சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் கபடி பயிற்சியாளர் ராஜூவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை மூன்று முறை பயிற்சியாளர் ராஜூ சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பாட்டி செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து தலைமறைவான ராஜூவை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ராஜூ கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியைத் தவிர வேறு யாரேனும் இதேபோன்ற பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ