தமிழுக்காக வாழ்ந்த பெருமகன் மறைமலை அடிகள் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் புகழாரம்
சென்னை, 15 ஜூலை (ஹி.ச.) தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையும், தமிழறிஞருமான மறைமலை அடிகளின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் விஜய் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனித்தமிழ் இயக்கத
முதலமைச்சர்


சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையும், தமிழறிஞருமான மறைமலை அடிகளின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் விஜய் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தமிழறிஞர் மறைமலை அடிகள் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது தனித்தமிழ் புகழ் வணக்கங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த போதிலும், தமிழின் இயல்பும் இனிமையும் குன்றாமல் வளர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், தமிழில் பிறமொழிக் கலப்பின்றி எழுதும் வழக்கத்தைத் தொடங்கி, தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் மறைமலை அடிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது மொழிப்பற்று, தமிழார்வம், சிந்தனைகளால் தமிழ்ச் சமூகத்திற்கு என்றும் உந்துசக்தியாகத் திகழும் மறைமலை அடிகளின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P