Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 15 ஜூலை (ஹி.ச)
கள்ளிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் என்பவருக்கும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் இவரது உறவினரான வர்ஷா என்ற பெண்ணுக்கும் இடையே சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் யுவராஜை திருமணம் செய்து கொள்ள வர்ஷா மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், இன்று காலை வர்ஷாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
அப்போது மகளை காப்பாற்ற முயன்று தடுக்க வந்த அவரது தாய் விநாயகஜோதி (45) என்பவரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் விநாயகஜோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த வர்ஷா உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த காரியாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவான யுவராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b