வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை மையம் தகவல்
புதுடெல்லி, 15 ஜூலை (ஹி.ச.) வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை உருவான இந்த காற்றழுத்த தாழ்வு
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை மையம் தகவல்


புதுடெல்லி, 15 ஜூலை (ஹி.ச.)

வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று காலை உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் அந்த பகுதிகளில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை மாற்றத்தின் தாக்கத்தால் வடமேற்கு வங்கக்கடல் கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், கரையில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாறுமா என்பதை இந்திய வானிலை மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Hindusthan Samachar / vidya.b