ஆக்சிஜன் சிலிண்டர் சுமக்கும் நிலை வரும் – மும்பை உயர்நீதிமன்றம் கவலை
மும்பை, 15 ஜூலை (ஹி.ச.) மும்பை–அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்திற்காக 847 சதுப்புநில (மாங்குரோவ்) மரங்களை வெட்ட அனுமதி கோரிய மனுவை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றம், பசுமைப் பரப்பு தொடர்ந்து குறைந்து வருவது குறித்து கடும் கவலை தெரிவித்தது. விசாரணை
மும்பை உயர் நீதிமன்றம்


மும்பை, 15 ஜூலை (ஹி.ச.)

மும்பை–அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்திற்காக 847 சதுப்புநில (மாங்குரோவ்) மரங்களை வெட்ட அனுமதி கோரிய மனுவை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றம், பசுமைப் பரப்பு தொடர்ந்து குறைந்து வருவது குறித்து கடும் கவலை தெரிவித்தது.

விசாரணையின் போது,

மும்பையில் பசுமைப் பரப்பு தொடர்ந்து குறைந்தால், மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை முதுகில் சுமந்து சென்று இடையிடையே ஆக்சிஜன் எடுத்துக்கொள்ள வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை என்று நீதிமன்றம் எச்சரித்தது.

மேலும், மரங்களை வெட்டியதற்குப் பதிலாக வேறு மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடுவது போதாது என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகிலேயே இழப்பீட்டு வனமரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

முதலில் மரக்கன்றுகளை நட்டு அவை வளர்வதை உறுதி செய்த பிறகே மரங்களை வெட்டுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அதே நேரத்தில், அதிவேக ரயில் திட்டத்தை நிறுத்தும் நோக்கம் நீதிமன்றத்திற்கு இல்லை என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் திட்டங்களை செயல்படுத்தும் சிறந்த நடைமுறையை உறுதி செய்வதே தனது நோக்கம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P