பழனி முருகன் கோவில் நிலம் தொடர்பான தனிநபர் பத்திரப்பதிவு ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திண்டுக்கல், 15 ஜூலை (ஹி.ச.) பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் நிலத்தை தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இ
உயர்நீதிமன்ற மதுரை கிளை


திண்டுக்கல், 15 ஜூலை (ஹி.ச.)

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் நிலத்தை தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், மடத்துக்கு சொந்தமானதாகக் கூறப்படும் நிலம் தொடர்பாக ஏற்கனவே உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கோவிலின் தக்காரை வழக்கில் தரப்பினராகச் சேர்க்காமல் தனி நீதிபதி பத்திரப்பதிவுக்கு அனுமதி வழங்கியது சட்டவிரோதமானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மடத்தின் சொத்துக்கள் தொடர்பான நிர்வாக அதிகாரம் தக்காரிடமே உள்ளதால், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில், பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மட நிலம் தொடர்பாக தனிநபர்கள் செய்த பத்திரப்பதிவை ரத்து செய்து, தனி நீதிபதி வழங்கிய உத்தரவையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam