Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 15 ஜூலை (ஹி.ச.)
எனது வாழ்க்கையில் நான் எளிமையான மனிதர்கள் இருவரை பார்த்துள்ளேன். ஒருவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றொருவர், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என்று துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இது தொடர்பாக அரசு விழா மேடையில் அவர் பேசுகையில்,
மோடி 4 மணி நேரம் தான் தூங்குவார். மிக எளிமையான வாழ்க்கை வாழ்வார்.
குஜராத் முதல்வராக இருந்தபோதிலிருந்து பார்த்து வருகிறேன்.
அவர் எளிமையான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார். மோடிக்குப் பிறகு நான் பார்த்த எளிமையான மனிதர் ரங்கசாமி. மாணவர்கள் முன்னேற்றத்திற்கான ரங்கசாமி கொண்டு வந்த திட்டங்கள் பட்டியலிடலாம்.
மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறார். காமராஜர் இப்படித்தான் வாழ்ந்திருப்பார் என நினைக்கத் தோன்றும் வகையில் ரங்கசாமி வாழ்ந்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக முதலமைச்சரும், துணைநிலை ஆளுநரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்காத நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி குறித்து துணைநிலை ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN