நடிகை சமந்தாவின் வளைகாப்பு விழா - புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்...!
தமிழ்நாடு, 15 ஜூலை (ஹி.ச.) நடிகை சமந்தாவின் வளைகாப்பு விழா நடைபெற்றதாகக் கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. பாரம்பரிய முறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள்
சமந்தா


தமிழ்நாடு, 15 ஜூலை (ஹி.ச.)

நடிகை சமந்தாவின் வளைகாப்பு விழா நடைபெற்றதாகக் கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

பாரம்பரிய முறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழாவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்களும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.

சமந்தா தனது கணவர், திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் நிடிமோருவுடன் முதல் குழந்தையை எதிர்பார்த்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் குழந்தை பிறக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கிடையில், சமந்தா கர்ப்பமாக இருப்பது குறித்து கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது வளைகாப்பு விழா தொடர்பான புகைப்படங்களும் வைரலாகியுள்ளன.

எனினும், வளைகாப்பு விழா, கர்ப்பம் அல்லது திருமணம் தொடர்பாக சமந்தா அல்லது அவரது குடும்பத்தினர் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதனால் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களின் உண்மைத்தன்மை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை,

என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam