Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று புறநகர் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் நேற்று இரவு மின்சார கம்பிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று மதியம் 1.40 மணி முதல் மாலை 5.40 மணி வரை சுமார் நான்கு மணி நேரத்திற்கு இந்த வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்படாது.
மாலை 5.40 மணிக்கு பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, வழக்கம் போல் அனைத்து புறநகர் ரயில்களும் இயக்கப்படும் என்றும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும், மாற்று போக்குவரத்து வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b