திருச்செந்தூரில் நடைபெற இருந்த வி தி லீடர்ஸ் 2-வது மாநாடு ரத்து
திருச்செந்தூர், 15 ஜூலை (ஹி.ச.) திருச்செந்தூரில் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவிருந்த வி தி லீடர்ஸ் அமைப்பின் 2-வது மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பதிலாக, ஆகஸ்ட் 2-ஆம் தேதி சிறிய அளவிலான நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள
அண்ணாமலை


திருச்செந்தூர், 15 ஜூலை (ஹி.ச.)

திருச்செந்தூரில் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவிருந்த வி தி லீடர்ஸ் அமைப்பின் 2-வது மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குப் பதிலாக, ஆகஸ்ட் 2-ஆம் தேதி சிறிய அளவிலான நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அன்றைய தினம், வி தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி முதல் மீனவ கிராமங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதே நாள் மாலை தூத்துக்குடியில் நடைபெறும் இதேபோன்ற மீனவ கிராம சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொள்ளாட்சியில் நடைபெற்ற முதல் மாநாட்டைப் போன்று அல்லாமல், இந்த நிகழ்ச்சி குறைந்த அளவிலான பங்கேற்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொள்ளாட்சி மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கூட்டம் திரண்டதுடன், மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அண்ணாமலை கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் தகவல். இதே கோயிலுக்கு சமீபத்தில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் முதலமைச்சர் விஜயும் சென்று வழிபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொள்ளாட்சி மாநாட்டை நடத்த வி தி லீடர்ஸ் அமைப்பின் மூலம் அதிகளவில் செலவுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுவதால், செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இனி வரும் நிகழ்ச்சிகளை சிறிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதந்தோறும் மாநாடுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தத் திட்டத்திலும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam