Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை 15 ஜூலை (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு–வந்தவாசி சாலையில்,
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி வேனில் இருந்து மாணவர்கள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது மாணவர்களை பாதுகாப்பாக இறக்கி சாலையை கடக்கச் செய்ய வேண்டிய பணியாளர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேனில் இருந்து இறங்கிய 2-ம் வகுப்பு மாணவன், வேனின் முன்புறம் வழியாக சாலையை கடக்க முயன்றபோது, வேனின் பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மாணவன், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பள்ளி வேன்களில் மாணவர்களை ஏற்றும் மற்றும் இறக்கும் நேரங்களில் கட்டாயம் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam