200-வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய பட்லர் - 2,வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமை
லண்டன் , 15 ஜூலை (ஹி.ச.) இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை இழந்த இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடைபெற
A


லண்டன் , 15 ஜூலை (ஹி.ச.)

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

20 ஓவர் தொடரை இழந்த இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் அந்த அணி 47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தப் போட்டி இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் ஜோஷ் பட்லருக்கு 200-வது ஒருநாள் போட்டியாக அமைந்தது.

இதன் மூலம் இங்கிலாந்துக்காக 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இருப்பினும், தனது மைல்கல் போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாத பட்லர், 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து 259 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி தனது இன்னிங்சை தொடங்கி விளையாடியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA