கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி
கோவை, 15 ஜூலை (ஹி.ச.) மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அர
கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி


கோவை, 15 ஜூலை (ஹி.ச.)

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மழை குறைந்து, அருவியில் நீர்வரத்து சீராகி வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளனர்.

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர் வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, வனத்துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து, வனத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக குளித்து மகிழலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை 5 மணிக்குப் பிறகு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அருவி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b