பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்- பிரதமர் மோடி புகழாரம்
புதுடெல்லி , 15 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சரும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான காமராஜரின் 124-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும், குறிப்பாக தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது
A


புதுடெல்லி , 15 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சரும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான காமராஜரின் 124-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும், குறிப்பாக தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந் நிலையில்,

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி

தனது எக்ஸ் (X) வலைதளப் பதிவில் காமராஜரை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார்.

அந்த பதிவில்,

கு. காமராஜ் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், சிறந்த பொதுவாழ்வு ஆளுமையாகவும் திகழ்ந்த அவர், தனது வாழ்வை தேசக் கட்டமைப்பிற்காக அர்ப்பணித்தவர்.

கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு, எதிர்கால தலைமுறைகளுக்கு இன்றும் வழிகாட்டியாக திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA