வேளாண் பட்ஜெட்டுக்கு முன் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
சென்னை, 16 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தொடர்பான தனி பட்ஜெட்டுக்கு முன்பான ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்,
Vijay


சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தொடர்பான தனி பட்ஜெட்டுக்கு முன்பான ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வேளாண்மைத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

துறையின் தற்போதைய செயல்திட்டங்கள், புதிய அறிவிப்புகள் மற்றும் வரவிருக்கும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயிகளின் நலனை முன்னிறுத்திய புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன.

மேலும், இந்த ஆண்டு எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P