சபரிவர்மன் மரணத்தில் உண்மையை வெளிக்கொணர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவீர்களா? – முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி
சென்னை, 16 ஜூலை (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணன்புதூரைச் சேர்ந்த சபரிவர்மன் (34) மரணம் தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக
Appavu


Jj


சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணன்புதூரைச் சேர்ந்த சபரிவர்மன் (34) மரணம் தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிவர்மன் கடந்த ஜூலை 8-ஆம் தேதி நீதிமன்றக் காவலில் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு மரணம் ஏற்பட என்ன காரணம் என்பதை அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் சபரிவர்மனுக்கு என்ன நடந்தது? நாகர்கோவில் கிளைச் சிறையில் அவர் உயிரிழந்ததற்கான காரணம் என்ன? அவரது மரணத்தை மறைத்து, அனாதை உடல் எனக் கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் வைத்ததாகக் கூறப்படும் தகவல்களின் உண்மை என்ன? என்பன உள்ளிட்ட பல கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

அத்துடன், திருப்புவனம் மடப்புரத்தைச் சேர்ந்த அஜித் குமார் உயிரிழந்த சம்பவத்தின்போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளை நினைவுகூர்ந்த அவர், தற்போது சபரிவர்மன் மரணம் தொடர்பாக ஏன் மௌனம் காக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அஜித் குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதுபோல, சபரிவர்மன் மரணம் தொடர்பிலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ