Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச)
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் விவாதம் நடைபெறுகிறது.
அரசின் புதிய நலத்திட்டங்கள், தொழில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 2 முதல் அரசு துறைகள் வாரியான ஆய்வுக் கூட்டங்கள் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆய்வுக் கூட்டங்கள் ஜூலை 22 வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளன.
புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தலின்போது அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அவற்றை செயல்படுத்துவதற்கான முக்கிய முடிவுகள் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தின் தற்போதைய நிதிநிலைக்கு ஏற்ப பட்ஜெட்டை வடிவமைப்பது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவது மற்றும் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ