Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 ஜூலை (ஹி.ச.)
கோவையில் பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக கார்ஸ் 327 நிறுவனம் சார்பில் 'ஆடி அதிரடி' யூஸ்டு கார் மேளா இன்று (ஜூலை 16) தொடங்கியது.
இந்த கண்காட்சி ஜூலை 20-ஆம் தேதி வரை, கோவை சிங்காநல்லூரில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து கார்ஸ் 327 நிறுவனத்தின் உரிமையாளர் விஷ்ணு வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆடி மாத தள்ளுபடி விற்பனையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த யூஸ்டு கார் மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரே கூரையின் கீழ் 300-க்கும் மேற்பட்ட தரமான பயன்படுத்தப்பட்ட கார்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான விலையில் பல்வேறு நிறுவனங்களின் கார்கள் இடம்பெற்றுள்ளன.
வாடிக்கையாளர்கள் விரும்பும் வாகனங்களை தேர்வு செய்தவுடன், உடனடி வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் வசதி, இன்சூரன்ஸ், வாகனப் பதிவு மற்றும் தேவையான சேவை வசதிகள் அனைத்தும் ஒரே இடத்தில் செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் முன் வாடிக்கையாளர்கள் தங்களது நம்பகமான மெக்கானிக்கை அழைத்து வந்து வாகனத்தை முழுமையாக பரிசோதனை செய்து வாங்கலாம் என்றும், இது வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையேயான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், வாடிக்கையாளர்களின் பழைய கார்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவற்றை மதிப்பீடு செய்து, நல்ல விலைக்கு எக்ஸ்சேஞ்ச் முறையில் பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த விஷ்ணு வேணுகோபால், இந்த சிறப்பு வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P