Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பல்வேறு தேர்தல் வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
சென்னை தி.நகர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் பாலசுப்ரமணிய சர்மா தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மானாமதுரை தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. டி. இளங்கோவன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஏ. தமிழரசி தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஆலங்குளம் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் வி. விபின் சக்கரவர்த்தி மற்றும் வாக்காளர்கள் இ. இசக்கிராஜா, ஆர். பத்மநாதன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட பிற தேர்தல் வழக்குகளிலும் தமிழக அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P