இடமாற்றங்களால் ஊழலை தடுக்க முடியாது, பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் – காயத்ரி ரகுராம்
சென்னை, 16 ஜூலை (ஹி.ச.) அரசு அதிகாரிகள் மீதான தொடர் இடைநீக்கங்கள், இடமாற்றங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் குறித்து நடிகையும் அதிமுக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தமிழக அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், இன்ன
Gayathri


Bb


சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)

அரசு அதிகாரிகள் மீதான தொடர் இடைநீக்கங்கள், இடமாற்றங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் குறித்து நடிகையும் அதிமுக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

இன்னும் எத்தனை இடைநீக்கங்கள்? இன்னும் எத்தனை அதிகாரிகள் இடமாற்றங்களும், பணியிட மாற்றங்களும்? இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் ஊழல் தொடர்கிறது.

அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்வதாலோ அல்லது பணியிட மாற்றம் செய்வதாலோ மட்டும் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊழலைத் தடுக்க வேண்டுமெனில், அதிகாரிகள் தாங்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருக்கும்போதே பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, அடிக்கடி இடமாற்றம் மற்றும் பணியிட மாற்றம் செய்வது நிர்வாகச் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும், அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு உரிய கண்காணிப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ