Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 ஜூலை (ஹி.ச.)
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான கோயல் மல்லிக், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவர், இந்திய துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நடிகையும் அரசியல்வாதியுமான கோயல் மல்லிக், 2026-ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்மைக்காலமாக அக்கட்சியில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விலகும் நிகழ்வுகள் தொடரும் நிலையில், அவரது ராஜினாமா கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கோயல் மல்லிக்கின் ராஜினாமாவிற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. அதே நேரத்தில், திரிணாமுல் காங்கிரஸில் நிலவி வரும் உள்கட்சி அதிருப்தி மற்றும் அரசியல் மாற்றங்களின் பின்னணியில் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P