மது போதையில் கூவம் கால்வாயில் தவறி விழுந்த நபர் உயிருடன் மீட்பு
சென்னை, 16 ஜூலை (ஹி.ச.) சென்னை மாவட்டம் முகப்பேர் அருகே ஜெ.ஜெ. நகர் பகுதியில் உள்ள பாடி புதுநகர் கூவம் கால்வாயில் மது போதையில் தவறி விழுந்த 40 வயது நபர் தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார். பாபு (40) என்பவர் மது போதையில் கால்வாயில் தவறி
Dr


சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)

சென்னை மாவட்டம் முகப்பேர் அருகே ஜெ.ஜெ. நகர் பகுதியில் உள்ள பாடி புதுநகர் கூவம் கால்வாயில் மது போதையில் தவறி விழுந்த 40 வயது நபர் தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.

பாபு (40) என்பவர் மது போதையில் கால்வாயில் தவறி விழுந்ததில், அவரது கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெ.ஜெ. நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், நீட்டிப்பு ஏணியை பயன்படுத்தி 'ஃபயர்மேன் லிப்ட்' முறையில் பாபுவை பத்திரமாக மீட்டனர்.

பின்னர், 108 அவசர மருத்துவ ஊர்தி மூலம் அவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / P YUVARAJ