கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரியின் மீது அரசு பேருந்து மோதி விபத்து
கிருஷ்ணகிரி, 16 ஜூலை (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அட்டகுறிக்கி என்னுமிடத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலையை கடக்க முயன்ற கிரானைட் லாரி மீது, அதிகாலையில் திண்டிவனத்திலிருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மோ
Accident


கிருஷ்ணகிரி, 16 ஜூலை (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அட்டகுறிக்கி என்னுமிடத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலையை கடக்க முயன்ற கிரானைட் லாரி மீது, அதிகாலையில் திண்டிவனத்திலிருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

அரசு பேருந்தின் முன்பக்கம் நொறுங்கிய நிலையில் பேருந்து ஓட்டுநருக்கு கால் முறிந்துள்ளது. மேலும் பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் காயம் ஏற்ப்பட்டுள்ள நிலையில், அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சாலையில் உள்ள லாரி மற்றும் அரசு பேருந்தை மீட்கும் பணியில் சூளகிரி தீயணைப்புத்துறையினர், போலிசார் ஈடுபட்டுள்ளனர்

இதனால் கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் 3 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளதால், போலிசார் போக்குவரத்தை சீரமைத்து விபத்துக்குறித்து விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN