கும்பகோணம் தீ விபத்து 22 ஆம் ஆண்டு நினைவு நாளில் பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இதய அஞ்சலிகள் வானதி சீனிவாசன்
சென்னை, 16 ஜூலை (ஹி.ச.) 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி.. அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாத நாள். பல்வேறு கனவுகளோடு தங்கள் குட்டிக் குழந்தைகளை, கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிக்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள், பதைப
Kumbakonam


சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)

2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி.. அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாத நாள்.

பல்வேறு கனவுகளோடு தங்கள் குட்டிக் குழந்தைகளை, கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிக்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள், பதைபதைத்துப் போன நாள்.

பள்ளியின் சத்துணவுக்கூடத்தில் பற்றிய தீ, கணநேரத்தில் பள்ளி முழுவதும் பரவ,என்ன நடக்கிறதென்று பிஞ்சுக் குழந்தைகள் சுதாரிக்கும்முன், மேற்கூரை சரிந்து விழுந்து, 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நாள்.

இன்று அந்த தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதனை நினைவூட்டி முன்னாள் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில்,

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு நாளில், உயிரிழந்த 94 பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இதய அஞ்சலிகள்.

தமிழக வரலாற்றில் என்றும் அழியாத பெருந்துயரமாகப் பதிந்த இந்தச் சம்பவம், பள்ளிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதால் ஏற்படும் பேராபத்தின் கோர நினைவாக உள்ளது.

இத்தகைய துயரங்கள் இனி ஒருபோதும் நிகழாத வகையில், அனைத்து கல்வி நிலையங்களும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து, மாணவர்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி செயல்பட வேண்டும் என்பதை இந்த நாளில் வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN