Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 16 ஜூலை (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு வெறும் 19 கன அடியாக பதிவாகியுள்ளது.
நீர்வரத்து குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.25 அடியாக குறைந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பும் 37.386 டி.எம்.சி. ஆகச் சரிந்துள்ளது.
இதற்கிடையில், பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் மற்றும் இருப்பை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தற்போது குடிநீர் தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நீர் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam