Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 16 ஜூலை (ஹி.ச.)
திருநெல்வேலி மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. வழக்கமான அலுவல் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பே மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டம் தொடங்கியபோது, அதிமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் படத்தை மன்றத்தில் வைக்க முயன்றனர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநகராட்சி மன்றத்தில் இதுபோன்ற நடவடிக்கைக்கு விதிமுறைகளில் இடமில்லை எனக் கூறி, அதிமுக உறுப்பினர்களின் முயற்சியை திமுக உறுப்பினர்கள் எதிர்த்தனர்.
இதையடுத்து இரு தரப்பு கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருவருக்கொருவர் கோஷங்கள் எழுப்பியதால் மன்றத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் கூட்டத்தின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, பரபரப்பான நிலை ஏற்பட்டது.
தகவலறிந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மன்றத்திற்குள் சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பின்னர் மாநகராட்சி மன்றக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P