சூறைக்காற்று காரணமாக வேதாரண்யத்தில் 2000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தம் - மீனவர்கள் வேதனை
நாகை, 16 ஜூலை (ஹி.ச) நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை பகுதிகளில் வானிலை மாற்றம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு, கரையோரங்களில் பலத்த சூறைக்காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீன்வளத்துறை அதிக
Over 2,000 boats grounded in Vedaranyam


நாகை, 16 ஜூலை (ஹி.ச)

நாகப்பட்டினம் மாவட்டம்

வேதாரண்யம் கடற்கரை பகுதிகளில் வானிலை மாற்றம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு, கரையோரங்களில் பலத்த சூறைக்காற்றும் வீசி வருகிறது.

இதன் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, கோடிக்கரை உள்ளிட்ட வேதாரண்யம் சுற்றுவட்டார கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பு கருதி கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காற்றின் வேகம் குறையும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள் என தெரிகிறது. இதனால் அப்பகுதி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் மற்றும் வலைகள் காற்றில் சேதமடையாமல் பாதுகாக்க மீனவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Hindusthan Samachar / vidya.b