Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 16 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, குட்கா உட்பட பல்வேறு வகையான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதனை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், கடந்த ஜூலை 09- ஆம் தேதி ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன் என்பவரின் வந்த கடையில் தடைச் செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்து வந்ததாகக் கூறி தென்தாமரைக்குளம் காவல்துறையினர், அவரை கைது செய்து அவரிடம் இருந்து 200 கிராம் குட்காவைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி, நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சபரிவர்மன் சிறையிலேயே உயிரிழந்தார்.
அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகளான தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், சுரேஷ் என்ற திருஉடைநம்பி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் இருந்தும் காயங்களால் மரணம் ஏற்படவில்லை என கூறபட்டு உள்ள மருத்துவ அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக அவர் உறவினர்கள் தெரிவித்து உள்ளனர் எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.
* சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
* சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.
* உயிரிழந்த குடும்பத்திற்கு மூன்று கோடி நிவாரணமாக வழங்க வேண்டும்.
* சபரி வர்மனின் மனைவி ஆனந்த வள்ளிக்கு அரசு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு வருகிறார்கள்.
Hindusthan Samachar / ANANDHAN