Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)
கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் செயல்பட்டு வரும் 'ரெஸ்டோ பார்'
(Resto-Bar) முறைபோல், தமிழ்நாட்டிலும் உணவகத்துடன் இணைந்த மதுபான கூடங்களுக்கு அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, தற்போது டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் பார்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து, அதற்கு பதிலாக உணவக வசதியுடன் கூடிய 'ரெஸ்டோ பார்'களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், தற்போது செயல்பட்டு வரும் FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களுக்கு மதிப்புக்கூட்டு வரி (VAT) விதிக்கப்படாத நிலையில், மதிப்புக்கூட்டு வரி வசூலிக்கப்படும் 'ரெஸ்டோ பார்'களுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரசின் வருவாயை அதிகரிக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுகுறித்து தமிழக அரசு அல்லது டாஸ்மாக் நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
Hindusthan Samachar / GOKILA arumugam