Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 16 ஜூலை (ஹி.ச.)
8 அணிகள் பங்கேற்கும் 10-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஆகஸ்ட் 4-ந்தேதி முதல்
28-ந்தேதி வரை நடைபெறுகிறது.
முதல் கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றன.
இதையடுத்து, பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், டி.என்.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.
ரூ.100, ரூ.150, ரூ.200, ரூ.300 மற்றும் ரூ.500 ஆகிய கட்டணங்களில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ரசிகர்கள் District.in செயலி மற்றும் அதன் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA