இருசக்கர வாகனத்தில் உயிரை பணயம் வைத்து சாகசம் - சென்னையில் 2 கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை, 16 ஜூலை (ஹி.ச.) சென்னை கதீட்ரல் சாலை பகுதியில் நேற்று இரவு சில இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் சாகசம் செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில
இருசக்கர வாகனத்தில் உயிரை பணயம் வைத்து சாகசம் - சென்னையில் 2 கல்லூரி மாணவர்கள் கைது


சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)

சென்னை கதீட்ரல் சாலை பகுதியில் நேற்று இரவு சில இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் சாகசம் செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று அந்த இளைஞர்களை மடக்கி பிடிக்க முயன்றனர்.

போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்ற இரண்டு பேரை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்களான தணிகைவேல் மற்றும் சந்தோஷ் என்பது தெரியவந்தது.

இருவரும் தங்களது இருசக்கர வாகனங்களில் சைலன்சரை அகற்றி அதிக சத்தம் எழுப்பியபடி, குறுக்கும் நெடுக்குமாகவும், ஒரு சக்கரத்தில் நிற்பது போன்ற ஆபத்தான சாகசங்களிலும் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.

இவர்களின் இந்த செயலால் சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.

இதனையடுத்து இருவர் மீதும் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோன்று பொதுச்சாலையில் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b