விக்ரம்-1 ராக்கெட் ஏவுதல் - பழவேற்காடு மீனவர்கள் ஜூலை 18 வரை கடலுக்குச் செல்லத் தடை
திருவள்ளூர், 16 ஜூலை (ஹி.ச.) ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதையொட்டி, ராக்கெட்டின் பாகங்கள் கடலில் விழும் அபாயம்
மீனவர்கள்


திருவள்ளூர், 16 ஜூலை (ஹி.ச.)

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதையொட்டி, ராக்கெட்டின் பாகங்கள் கடலில் விழும் அபாயம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக, பழவேற்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஜூலை 18-ஆம் தேதி வரை கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை காரணமாக, பழவேற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

ராக்கெட் ஏவுதல் முடிந்து பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்ட பிறகே மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பல நாட்கள் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam