Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தமிழ்நாட்டில் இன்று முதல் தொடங்குகின்றன.
இதன் முதற்கட்டமாக பொதுமக்களே தங்கள் விவரங்களை தாங்களாகவே பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பில், பொதுமக்கள் இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் தங்கள் குடும்பம் மற்றும் வீடு தொடர்பான விவரங்களை தாங்களே பதிவேற்றம் செய்யலாம்.
இதனால் கணக்கெடுப்பு பணி மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுய கணக்கெடுப்பைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடு வீடாக நேரடியாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த உள்ளனர்.
அப்போது விடுபட்டவர்கள் மற்றும் சுய கணக்கெடுப்பில் பங்கேற்காதவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும்.
இது குறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சுந்தரேஷ் பாபு கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் இந்த சுய கணக்கெடுப்பில் தவறாமல் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b