Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 17 ஜூலை (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் சேந்திமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தம்மாள் நேற்று திருநெல்வேலியில் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது தனது கைப்பையில் 3 சவரன் தங்க வளையல்களை வைத்திருந்தார்.
பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது பையில் இருந்த நகைகள் திருடப்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்து இறங்கிய பிறகே நகை திருடப்பட்டதை அறிந்த ஆறுமுகத்தம்மாள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்தம்மாள் மற்றும் முத்துமாரி ஆகிய இரண்டு பெண்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 3 சவரன் தங்க வளையல்களை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த கூட்ட நெரிசலான இடங்களில் பயணம் செய்யும்போது தங்களது உடமைகள் மற்றும் நகைகள் குறித்து கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b