Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 17 ஜூலை (ஹி.ச.)
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மாரியம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
காலை 5 மணி முதலே ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து 1008 நெய் விளக்குகள் ஏற்றி, கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும், ஆடி மாதம் முழுவதும் பெரிய மாரியம்மன் கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam