Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஜூலை (ஹி.ச)
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் இந்திராணி கைது செய்யப்பட்டிருப்பதற்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மாற்றத்தை வாக்குறுதியாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, ஜனநாயக குரல்களை ஒடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், திமுக அரசின் நீட்சியாகவே தற்போதைய அரசு செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளது.
அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க முடியாது என்றும், இத்தகைய நடவடிக்கைகளுக்கு அஞ்சும் இயக்கம் அதிமுக அல்ல என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், எத்தனை பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், அவற்றை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றும் அதிமுக தனது கண்டன அறிக்கையில் உறுதிபட தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ