இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர விசாரணை
பெங்களூரு , 17 ஜூலை (ஹி.ச.) பெங்களூருவில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நேற்று இரவு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பு, அதன் கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக எழு
A


பெங்களூரு , 17 ஜூலை (ஹி.ச.)

பெங்களூருவில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நேற்று இரவு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

விமானம் புறப்படுவதற்கு முன்பு, அதன் கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றை விமான பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.

பின்னர், பாதுகாப்புப் படையினர் விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு உள்ளிட்ட எந்த ஆபத்தான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால், இது வெறும் புரளி மிரட்டல் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA